கருக்கலைப்பு சட்டம் ; உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருமணமாகாத பெண்களுக்கும் பொருந்தும்!
கருக்கலைப்பு
கருக்கலைப்பு
Published on

சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பானதாகவும் கருக்கலைப்பினை செய்துக்கொள்ள அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கருக்கலைப்பு எந்த சூழலில் யாருக்கெல்லாம் செய்யலாம் என்பது பற்றிய விதிமுறைகாலை ஒழுங்குப்படுத்துவது குறித்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கர்பிணிப்பெண்கள்
கர்பிணிப்பெண்கள்

அந்த வழக்கினில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடத் தகுந்த பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அதில் அனைத்து கருவுற்ற பெண்களும் பாதுகாப்பாக மற்றும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள் என்றும்,

ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது எனவும்,

ஒரு பெண் கர்ப்பமடைந்து 24 வாரங்கள் வரை மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் படி கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமையுண்டு, இது திருமணமாகாத பெண்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உச்சநீதிமன்ற உத்தரவு பெண்களிடையே பெரும் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com