
மெக்சிகோவில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்தனர். இதில், அங்கு தங்கியிருந்த அகதிகள் பலர் சிக்கி உடல் கருகி பலியாகினர்.
மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் குடியேற்ற மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 39 பேர் பலியாகினர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவென பற்றிய தீ, அகதிகள் முகாம் முழுவதும் பரவியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படை வீரர்களால் கைது செய்து தடுப்பு காவல் முகாம்களில் அடைத்து வைக்கின்றனர். அமெரிக்காவிடம் இருந்து உரிய அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். அனுமதி கிடைக்காதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.