வேகமெடுக்கும் அமீபா மூளைக்காய்ச்சல்… மேலும் 4 பேர் பாதிப்பு!

Amoeba
Amoeba
Published on

கேரளாவில் தொடர்ந்து பல காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், தற்போது அமீபா காய்ச்சல் வேகமெடுத்துள்ளது. அதாவது உயிரைக் கொல்லும் அளவிற்கு வீரியமெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

மலைகள், நீர்நிலைகள் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ள இடம் கேரளா. அழகு நிறைந்த இந்த மாநிலத்தில் சமீபக்காலமாக இயற்கை அடாவடி செய்து வருகிறது. இன்னும் நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தின் இழப்பிலிருந்தே மக்கள் வெளிவரவில்லை. அதற்குள் அமீபா மூளைக்காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நிலச்சரிவுக்கு முன்னரே கேரளாவில் பல விதமான தொற்றுகள் பரவி மக்களை அச்சுறுத்தி வந்தன. பன்றிக்காய்ச்சல், எலிக் காய்ச்சல், டைபாய்டு ஆகியவற்றிலிருந்து, வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் என அரியவகை நோய்கள் வரை கேரளாவில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில்தான் நிபா வைரஸ் காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்தான். அந்தநிலையில் தற்போது அமீபா மூளைக்காய்ச்சலும் பரவி வருகிறது.

நீர்நிலைகளில் குளிக்கும்போது அதிலுள்ள அமீபா மனிதர்களின் மூக்கின் வழியே சென்று அவர்களின் மூளையைத் தாக்குகிறது. இதனைதான் அமீபா மூளைக்காய்ச்சல் என்பார்கள். இது தீவிரமாக தாக்கும்போதே உயிர்பலி ஏற்படும்.

அந்தவகையில் நேற்று முதலில் நீர்நிலையில் குளித்த மூன்று பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஒருவரிடம் அந்த நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் இதுவரை இத்தனைப் பேருக்கு எலிக்காய்ச்சல்… சுகாதாரத்துறை அறிவிப்பு!
Amoeba

வேகமாக பரவி வருவதை கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சர் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்தார். தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் குளிக்கும்போது நாசிக்குள் தண்ணீர் வருவதை தவிர்க்குமாறு வலியுறுத்தினார். அதேபோல், நோய் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சுகாதாரத்துறையினர், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய, தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். இப்போது, கேரளாவில் குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு வைரஸ் தொற்றையும் பரிசோதித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com