புதிய கல்விக் கொள்கையின் படி மாணவர்களுக்கு 'கிரெடிட்' முறையில் சான்றிதழ் வழங்க யுஜிசி பரிந்துரை!

புதிய கல்விக் கொள்கையின் படி மாணவர்களுக்கு 'கிரெடிட்' முறையில் சான்றிதழ் வழங்க யுஜிசி பரிந்துரை!

புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வரையறைகளில் பட்டப் படிப்புகளைப் பயின்று வரும் மாணவர்கள், இடையில் அதிலிருந்து வெளியேறினாலும், அவர்கள் படித்த காலத்தின் அடிப்படையில், அதுவரையில் அவர்களுக்கு கிடைத்த அறிவுப் பெருக்கத்தை அளவுகோலாக வைத்து சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் அளிக்கப்படும். இது தொடர்பாக, யுஜிசி எனப்படும் பல்கலை மானியக் குழுவின் நிபுணர் குழு ஆய்வு செய்துஉள்ளது. ஆய்வின் அடிப்படையில் அது பரிந்துரையின் படி குறிப்பிட்ட ஆண்டுகள் படித்தால் தான், சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெற முடியும் என்ற நிலை இனிமேல் இல்லை.

பட்டம் பெற குறிப்பிட்ட அளவுக்கான காலம் படிக்க வேண்டும் என்பது இல்லாமல், கல்வித் தேர்ச்சிக்கான தகுதியாக, 'கிரெடிட்' எனப்படும் தகுதி மதிப்பெண் பெற்றாலே, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும், என யுஜிசி எனப்படும் பல்கலை மானியக் குழுவின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இதை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும். இதனால், அதிக காலம் காத்திராமல், மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய தகுதியை நிர்ணயித்து கொள்ள முடியும். மேலும், இது அவர்களுடைய கல்வித் திறனை உயர்த்தவும் வாய்ப்புள்ளது என அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com