பரந்தூர் விமான நிலையத்துக்காக விளைநிலம் எடுப்பு: விவசாயிகள் கதறல்!

Acquisition of arable land for Parantur Airport: Farmers scream!
Acquisition of arable land for Parantur Airport: Farmers scream!
Published on

2030ம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இலக்குகளை அடைய வேண்டும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில், வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் சென்னையில் 2வது விமான நிலையம் அவசியம் என கூறப்படுகிறது. அதன்படி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 5746.18 ஏக்கர் (விவசாய நிலம்) நிலப்பரப்பில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை வரும் 2028ம் ஆண்டில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விமான நிலையத்துக்கான பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து களமிறங்கியுள்ளது.

விவசாயிகள் கதறல்: பொதுவாகவே, நமது நாட்டில் விவசாயிகளின் தற்கொலை மற்றும் போராட்டங்கள் என்பது ஒவ்வொரு நாளும் நடப்பதுதான். பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, மக்களின் குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.

அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் விளைநிலங்களும் பறிபோக காத்திருகின்றன. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தங்களின் இருப்பிடமும், விளைநிலங்களும் பறிபோக அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து 600 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிராம மக்கள் அனைவரும் விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாய் துர்நாற்றத்தை நீக்கும் 6 வழிமுறைகள்!
Acquisition of arable land for Parantur Airport: Farmers scream!

தமிழக தொழில் துறையின் அறிவிப்பு: விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக தொழில் துறை ஈடுபட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால், அவை ஏற்றுக் கொள்ள மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

600வது நாளாக தொடரும் போராட்டம்: இந்நிலையில் இன்று 600வது நாளை ஒட்டி ஏகனாபுரத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்கள் தங்களின் வயல்நிலங்கள் வழியாகவே ஊர்வலமாக நடந்து வந்து அறுவடைக்கு தயாராக உள்ள விவசாய நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெண்கள் கீழே விழுந்து, வாயில் அடித்தபடி அழுது கதறும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், கிராம மக்கள் வயல்வெளியில் நின்று கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com