தமிழக ஆளுநரின் செயல் எதேச்சதிகாரத்தின் வெளிபாடு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதிலடி!

தமிழக ஆளுநரின் செயல் எதேச்சதிகாரத்தின் வெளிபாடு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதிலடி!
Updated on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட செயல் எதேச்சாதிகாரத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவருமான சுப்ரியா சுலே, ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராகச் செயல்படாமல் அவர், பா.ஜ.க.வின் ஆளுநராக செயல்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டதான புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வியாழக்கிழமை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். எனினும் அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்ட விதம் எதேச்சாதிகாரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை என்றார் சுப்ரியா சுலே. இன்று தமிழகத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், நாளை ஏன் மற்ற மாநிலங்களிலும் நடக்காது என அவர் கேள்வி எழுப்பினார். பொது சிவில் சட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அது குறித்து முன்கூட்டியே பதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று பாராமதி தொகுதி எம்.பி.யான சுப்ரியா சுலே குறிப்பிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com