ஹரியானா மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை: தமிழக முதல்வர் வலியுறுத்தல்!

ஹரியானா மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை: தமிழக முதல்வர் வலியுறுத்தல்!

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்பட்ட கலவரத்தால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ‘ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாநில அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இது குறித்து தமிழக முதல்வர் தனது ட்விட்டர் (X) பதிவில், “ஹரியானா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும் கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன். அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறுப்புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது.

கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதைத் தக்க முறையில் உறுதி செய்திட வேண்டும் என்றும் ஹரியானா அரசினை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com