மறைந்த தந்தையின் உடலை தூக்கிச் சென்ற நடிகர் அஜித்!

மறைந்த தந்தையின் உடலை தூக்கிச் சென்ற நடிகர் அஜித்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது தந்தைக்கு தற்போது 85 வயதாகும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தனது தந்தையின் இறப்பு குறித்து நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறக்கத்திலேயே தனது தந்தை இன்று உயிரிழந்ததாகவும், இதுவரை அவரை அக்கறையுடன் கவனித்து வந்த மருத்துவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார். மேலும், இறுதிச்சடங்கு குடும்ப நிகழ்வாகவே அமையும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அஜித்தின் தந்தை உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், மகிழ் திருமேனி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது அவரது தந்தையின் இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஜித் குமார் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அனைவரையும் கணகலங்க வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com