நடிகர் அஜித்தின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் பயணம் அறிவிப்பு!

நடிகர் அஜித்தின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் பயணம் அறிவிப்பு!

டிகர் அஜித் தொடங்கியுள்ள வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் நிறுவனத்தினுடைய முதல் பைக் டூர் பயணத்திற்கான தொடக்க தேதியை நிறுவனத்தினுடைய மேலாளர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த வாகன பிரியரும் கூட. இவர் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரிஷா, சஞ்சய் தத் உடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், மறுபுறம் பல்வேறு நாடுகளில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் வாகன பயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் நிறுவனத்தை துவங்கி உள்ளார். இந்த நிறுவனத்தினுடைய மேலாளர் தற்போது எக்ஸ் ட்விட்டர் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் அஜித் குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் நிறுவனம் தற்போது ராஜஸ்தான், அரபு நாடுகள், ஓமன் தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பைக் டூர் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு திட்டமிடப்பட்டு, பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டூர் பயணத்தில் தங்குமிடம், செல்லும் வழி அனைத்தும் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் நிறுவனத்தினுடைய முதல் மோட்டார் பைக் சுற்றுப்பயணம் வரக்கூடிய அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com