நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்..! கேட்ட உதவி கிடைத்தும் பலனளிக்காமல் போனது..!

actor muthukaalai with his wife
actor muthukaalai with his wife Source:zeenews
Updated on

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (47) மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.‎‎ அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக கிருமி நோய் தொற்று நுரையீரலில் பரவி இருப்பதால் கடந்த 17 நாட்களாக சுயநினைவின்றி மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் உதவுவதற்கு உறவினர்கள் யாருமின்றி தன்னுடைய மனைவியை கவனித்து வருவதாகவும், மேலும் உரிய மேல் சிகிச்சை அளிக்க‌ உதவிட வேண்டும் என தமிழக முதல்வர் ‌ஜோசப் விஜய்‌க்கு கோரிக்கையுடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.‎

தன்னிடம் உதவி கேட்டதும் முதல்வர் விஜய்க்கு உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முத்துக்காளையிடம் செல்போன் வாயிலாக பேச வைத்துள்ளார். இதையடுத்து முத்துக்காளைக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளை விரைந்து செய்யுமாறும் கூறியிருக்கிறார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகனை, நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பினார் விஜய். அங்கு, முத்துக்காளையின் மனைவியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்ததோடு, தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளும் தாமதமின்றி வழங்கப்படவும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்காளை மனைவி மாலதி ,இன்று காலை உயிரிழந்தார். முத்துக்காளை கேட்ட உதவி கிடைத்தும், தற்போது அதற்கு பலன் கிடைக்காமல் போனது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com