முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

மிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கிறார். தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றின் வாயிலாக தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ பதிவில், 'வணக்கம்! என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com