நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயில் அபகரிக்க முயற்சி- கலெக்டரிடம் புகார்..!

நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயில் அபகரிக்க முயற்சி- கலெக்டரிடம் புகார்..!
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் அருள்மிகு அய்யனார் கோவில் உள்ளது. நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலான இக்கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாக உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் மனு அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் கோயிலுக்கு சம்பந்தமில்லாத தனி நபர் சிவராத்திரிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் பரமக்குடி உதவி ஆட்சியரிடம் கோயில் நிர்வாகத்தினர் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலின் பரம்பரை நிர்வாக டிரஸ்டியாக பாக்யராஜ் உட்பட 3 பேர் உள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து குலதெய்வ குடிமக்களும், பக்தர்களும் ஒற்றுமையாக சேர்ந்து மாசி மகா சிவராத்திரி விழா நடத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்த கோயிலில் சாமியை இதுவரை குலதெய்வமாக வணங்காத நபரான தங்கமணி என்பவர் இந்த முறை சிவராத்திரி ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். மேலும் கோயில் நிர்வாக டிரஸ்டியா்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கிறார். கோயிலை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரமக்குடி உதவி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோயிலுக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சேத்தூர் கிராமத்தில் 24.19 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. அந்த நிலத்தை கோயில் குடிமக்கள் மீட்டுத்தருமாறு இந்து சமய அறநிலையத் துறையில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையினர் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம விஏஓ சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் மதிப்பு சுமார் 5 கோடி ஆகும்.

கோயிலுக்குள் வந்தால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே தங்கமணி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோயில் நிர்வாகிகள் இன்று பரமக்குடிய உதவி ஆட்சியர் அப்தாப் ரசூலிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com