நடிகர் விஜய் பிறந்தநாள்.. அலங்காநல்லூரில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்!

நடிகர் விஜய் பிறந்தநாள்.. அலங்காநல்லூரில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய  ரசிகர்கள்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மதுரை அலங்காநல்லூரில் விஜயின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரைப்பட உலகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய விஜய் தற்பொழுது அனைத்து தரப்பு மக்களின் கதாநாயகனாக நெஞ்சில் குடி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கேக் வெட்டியும், பேனர் போஸ்டர் வைத்தும் ஏழை குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அன்னதானம், இனிப்பு போன்றவற்றை வழங்கிக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை அலங்காநல்லூர் ஒன்றியம் முதுவார் பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கக்கூடிய 150 குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள 20 பேர் கொண்ட குழுவினர் இணைந்து மதிய உணவாக குஸ்கா, முட்டை அடங்கிய உணவை அன்னதானமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டார்கள்.

logo
Kalki Online
kalkionline.com