“பொன்னியின் செல்வன் கதையின் தூண்களே பெண்கள் தான்” - நடிகை ஐஷ்வர்யா லட்சுமி!

“பொன்னியின் செல்வன் கதையின் தூண்களே பெண்கள் தான்” - நடிகை ஐஷ்வர்யா லட்சுமி!

லைக்கா - மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.

நாடு முழுவதும் படக்குழுவினர் நடத்தும் புரோமொஷன் நிகழ்ச்சிகளில் அதில் நடித்துள்ள நடிகர், நடிகையர் கலந்து கொண்டு வருகின்றனர். டெல்லியில் அவ்வாறான நிகழ்ச்சி ஒன்றில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சில் பேசிய விக்ரம், “ஹிந்தி ரசிகர்களுக்கு இந்த படத்தை புரிந்து கொள்வது அத்தனை எளிதாக இருந்திருக்காது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட உங்களுக்கு உச்சரிக்க சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் கடந்து பாகம் ஒன்றிற்கு நீங்கள் தந்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் போடப்பட்ட முடிச்சுகளுக்கு விடை காண நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. பாகம் ஒன்று ஒரு அறிமுகம் மட்டுமே. அத்தனை முக்கிய திருப்பங்களும் பாகம் இரண்டில் உங்களுக்காக காத்திருக்கின்றன” என்று கூறினார்.

“ இயக்குனர் மணிரத்னம் ஒருவரே படத்தில் எங்களுக்கு இருந்த இணைப்புப்புள்ளி” என்று பேசிய நடிகை திரிஷா, “ நாவல்களை படித்தவர்களையும் படிக்காதவர்களையும் இப்படம் முழுமையாக சென்றடைய அவர் எடுத்த முயற்சி அளப்பரியது” என்று கூறினார்.

நடிகை ஐஷ்வர்யா லட்சுமி, “பொன்னியின் செல்வம் கதையின் தூண்களே பெண்கள் தான்” என்று கூறினார்.

பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு ஹிந்தியிலே பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, “எனக்கு ஹிந்தி சரளமாக தெரியாது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச கற்றுக்கொள்கிறேன். தவறு எதுவும் செய்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு பேச தொடங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com