கடுமையான காய்ச்சலோடு மருத்துவமனையில் குஷ்பு!

கடுமையான காய்ச்சலோடு மருத்துவமனையில் குஷ்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கடுமையான காய்ச்சலால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஐதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்பு, சென்ற இரு தினங்களாக கடுமையான காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும் என அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவரது உடல்நிலை நேற்று இரவு மிகவும் மோசமாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் குஷ்புவுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்படும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனது உடல் நிலை மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. இதனால் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடலில் ஏற்படும் சிறு சிறு அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உன்னிப்பாக கவனியுங்கள். கவனிக்காமல் விட்டதால்தான் நான் தற்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். விரைவில் நான் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால், அதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன்’ எனப் பதிவிட்டு இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com