நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி சந்திப்பு !

நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி சந்திப்பு !

நடிகையும், பாஜக தேசிய மகளிரணி உறுப்பினருமான குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். ஹீரோக்கள் உருவாக்கப் படுவதில்லை அவர்கள் பிறக்கிறார்கள் என்கிறார் நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

16வது ஐபில் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக தோனி உள்ளார். தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகையும், பாஜக தேசிய மகளிரணி உறுப்பினருமான குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள். இதனை தோனி நிரூபித்துள்ளார். எங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் 88 வயதான எனது மாமியாரை சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். மஹி, நீ பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com