தாராவியை மறுசீரமைக்க அதானி குழுமம் ஒப்பந்தம்!

தாராவி பகுதி
தாராவி பகுதி

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் ரூ.5,069 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மும்பையில் கீழ்த்தட்டு மக்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாக தாராவி விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி கருதப்படுகிறது. இங்கு சுமார் 12 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள தாராவி குடிசை பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள தாராவியை மறுசீரமைக்க மகாரஷ்டிர அரசு கடந்த 15 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் மகாராஷ்டிர  அரசு இதற்கான ஏலம் அறிவிப்பு செய்தது.

இந்த ஏலத்தில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் இறுதியில் அதானி குழுமம், டிஎல்எப் மற்றும் நமன் குரூப் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. அதில் அதானி குழுமம் ரூ. 5069 கோடிக்கு ஏலத்தொகைக்கு வெற்றிபெற்று, மும்பையை மறுசீரமைக்கும் ஒப்பந்த பணியை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com