உலகின் இரண்டாவது பணக்காரர் அதானி

உலகின் இரண்டாவது பணக்காரர் அதானி

அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகிய உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் 273.5 பில்லியன் டாலர் மதிப்புடன் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த மாதம் அர்னால்ட்-யை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பெற்றிருந்த கௌதம் அதானி, ஜெஃப் பசோஸ்-க்கு அடுத்த இடத்தில் இருந்தார்.

தற்போதைய பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி அதானி குழுமத் தலைவரும்  இந்தியருமான கெளதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரர் ஆகியிருக்கிறார் . இதற்கு காரணம் அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது தான்.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ்,அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் நிறுவனங்கள் 4.97 முதல் 3.45 சதவிகிதம் வரை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது  இதனால் தற்போது அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com