ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி! சரிவினை சந்தித்த LIC !

ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி! சரிவினை சந்தித்த LIC !

அதானி குழும பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழும பங்குகள் அனைத்தும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையானது வெளியான நிலையில், பெரும் சரிவினைக் கண்டுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதன் வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை அடுக்காக முன்வைத்தது. இதற்கிடையில் தான் கடந்த ஜனவரி 25 அன்றே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்களான சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 1% பங்குகளை டிசம்பர் 31, 2022 நிலவரப்படி இருக்கலாம் என முக்கிய முதலீட்டாளரான ஏஸ் ஈக்விட்டி தரவானது சுட்டிக் காட்டுகின்றது.

கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் 19% முதல் 27% வரையில் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலையானது, 3.40% சரிவினைக் கண்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸின் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 6,55,88,170 அல்லது 5.96% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 25,454 கோடி ரூபாயில் இருந்து, 19,247 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதில் 6,237 கோடி ரூபாய் எல்ஐசிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸின் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 4,81,74,654 அல்லது 4.23% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 16,585 கோடி ரூபாயில் இருந்து, 13,307 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 3279 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com