வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ளலாம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி நடைபெறுவது வழக்கம். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

மேலும் அரசியல் கட்சிகளும் தற்போதைய காலத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், விடுபட்டவர்களை சேர்க்கவும் மற்றும் இறந்தவர்களை நீக்கும் பணியையும் தீவிரம் கட்டி வருகின்றன‌. ஏனென்றால் தற்போது நடைபெறும் முகாம்களை பயன்படுத்தி சேர்ப்பவர்கள் மட்டுமே வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக் 27) விரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் கோர விரும்புவோர் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கும் வசதியும் இடம் பெற்று இருக்கிறது. இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் முடியும். இதற்குரிய விண்ணப்பங்களை பயன்படுத்தி அக்டோபர் 27 இன்று முதல் டிசம்பர் 9ம் தேதி வரை ஆன்லைன் வழியாகவும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் நவம்பர் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. 2024 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று சிறப்பு முகாம் நாட்களில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். ஜனவரி 5ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,

அதைத் தொடர்ந்து இந்திய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி அன்று புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com