
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்காகவே எதிர்நீச்சல் சீரியல் பார்த்தவர்கள் பலர். அப்படி யாரும் நிரப்ப முடியாத அளவிற்கு நடிகர் மாரிமுத்து நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார்.
இவரின் நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர்கள் பல படங்களில் வாய்ப்பளித்தனர். ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவர் அடைந்த உயரம் உச்சக்கட்டமாகும். ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அவரின் கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப்போவது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் பலர் நடிகர் வேல ராமமூர்த்தி தான் கரெக்டாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.அதேபோல், நடிகர் பசுபதி போன்றோர் பெயரும் அடிபட்டது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் குழுவினர் அந்த சஸ்பென்ஸை தற்போது உடைத்துள்ளனர். ஆம், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிக்கு வருவது போல ஆதிசேகரனின் மாஸ் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் முகம் முழுவதுமாக தெரியாவிட்டாலும் ஆதி குணசேகரனாக இனி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கப்போவது நடிகர் வேல ராமமூர்த்தி தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பலரும் வேல ராமமுர்த்தி கரெக்டாக இருப்பார் என கூறிவந்த நிலையில் அவரையே தேர்ந்தெடுத்துள்ளது எதிர்நீச்சல் குழு. மீண்டும் வீட்டிற்கு வந்த ஆதிகுணசேகரனை பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்பது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.