முடிவுக்கு வரும் சூரியக் குடும்பம் மற்றும் பூமியின் செயல்பாடு: இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முடிவுக்கு வரும் சூரியக் குடும்பம் மற்றும் பூமியின் செயல்பாடு: இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Published on

சூரியனை ஆராய இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவிவட்டப் பாதை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை 4ஆவது முறையாக வெற்றிகரமா உயர்த்தப்பட்டுள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை கடந்த 2ஆம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம், முதல்முறையாக கடந்த 3ஆம் தேதியும் இரண்டாவது கட்டமாக கடந்த 5ஆம் தேதியும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டன. இதேபோல, 3ஆவது கட்டமாக கடந்த 10ஆம் தேதி அதிகாலை வட்டப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், 4ஆவது கட்டமாக சுற்று வட்டப்பாதையை உயர்த்துவதற்கான பணிகள் இன்று அதிகாலை 2.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, விண்கலத்தின் செயல்பாடுகள், பெங்களூரு, போர்ட்பிளேர் மற்றும் மொரீசியஸில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து கண்காணிக்கப்பட்டன. தற்போது, குறைந்தபட்சம் 256 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 1 லட்சத்து 21 ஆயிரத்து973 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றிவருகிறது.

அடுத்த கட்டமாக புவி வட்டப்பாதையில் இருந்து Trans-Lagragean Point 1 பகுதிக்கு, அதாவது, பூமியிலிருந்து சூரியனை நோக்கி அனுப்பும் பணிகள் வரும் 19ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே சந்திரயான் 3 வெற்றியடைந்த நிலையில், ஆதித்யா எல்1-ம் இலக்கை அடையவுள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

நிகர்சாஜி
நிகர்சாஜி

இதுகுறித்து ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி கூறுகையில், "சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்பட தேவையான எரிபொருள், இன்னும் 500 ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன் பின் சூரியன் விரிவடைந்து கொண்டே வந்து ஒட்டு மொத்த சூரிய குடும்பத்தையும் அழித்துவிடும் . மேலும் இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு சூரிய குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com