செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்து பேசினால், ஆட்சியே கவிழ்ந்து விடும்:எடப்பாடி கணிப்பு!

செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்து பேசினால், ஆட்சியே கவிழ்ந்து விடும்:எடப்பாடி கணிப்பு!
Published on

ரண்டு ஆண்டுகால தி.மு.க ஆட்சி, மக்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தக்காளி முதல் பருப்பு வரை அத்தனையும் விலை உயர்ந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து பேசினார். தக்காளி விலை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை.  தான் என்ன பேசுவதென்றே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்.  

தொட்டுப்பார்... சீண்டிப்பார் என்கிறார், முதல்வர்.  திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்கிறார். ஒரு முதல்வர் பேசுகிற பேச்சா?  சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒரு முதல்வரே திருப்பியடிப்பேன் என்றெல்லாம் பேசுகிறார். என்ன பேசுதென்றே தெரியாமல் பேசும் முதல்வரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவது?

தி.மு.க. ஆட்சியில் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறைந்தபட்சம் 70 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மின்கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சரியான மருத்துவம் இல்லை. இதற்கு திறமையற்ற தி.மு.க. அரசுதான் காரணம்.

மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. பத்தாண்டில்  எந்த பணியும் நடைபெறவில்லை என்று பச்சைப் பொய்யை சொல்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவலர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காவலர் நலவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இருந்தால்  நேர்மையும், திறமையும் உள்ள காவல்துறை உயர் அதிகாரி தற்கொலை செய்திருக்க மாட்டார்.

அமைச்சர் ரகுபதி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், ஊழல் தடுப்பு பிரிவு அவர் வசமுள்ளது. ஊழலைப் பற்றி பேச அவருக்கு தகுதியும், அருகதையும் கிடையாது என்று பேசியிருக்கிறார்.

ஒரு பக்கம் ஆளுநர் vs அறிவாலயம்  மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவும் ஸ்டாலின் அரசை எதிர்ப்பில் சுறுசுறுப்பு காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com