அதிமுகவின் மக்களவைத் தலைவர் ரவீந்திரநாத்: பாஜகவின் கடிதத்தால் சர்ச்சை!
Editor 1

அதிமுகவின் மக்களவைத் தலைவர் ரவீந்திரநாத்: பாஜகவின் கடிதத்தால் சர்ச்சை!

நாடாளுமன்றத்தில் ஜூலை 20 நாளை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 19 இன்று மாலை 5:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் மக்களவைத் தலைவர் ரவீந்திரநாத், இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரகலாஷ் ஜோசி அழைப்பு விடுத்துள்ளார்.அதற்கான அழைப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரவீந்திரநாத் பகிர்ந்துள்ளார். மேலும் நடைபெற்ற உள்ள கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய மசோதாக்கள் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, நேற்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்திலேயே தெரிந்திருக்கும் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று. அதிமுகவின் வளர்ச்சியை இந்தியாவும் உணர்ந்துள்ளது. அதனால் தான் நேற்று முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ரவீந்திரநாத். மேலும் ஏற்கனவே அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக கருதக்கூடாது என்று இரண்டு முறை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. அவரால் ஒரு தாக்கம் ஏற்படப் போவதில்லை, ஒரு சுயாட்சி எம்.பி போன்று தற்போது அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com