ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் - இபிஎஸ்..!

இபிஎஸ்
இபிஎஸ்
Published on

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்படும் என அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி(EPS) அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் குடும்பச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 10 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வி கடன் ரத்து, வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர், மகளிர்களுக்கு மாதம் 2000 உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

அதிமுக ஆட்சி அமைந்தவுடன், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை குறைப்பதற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முறை ரூபாய் 10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட குடும்ப சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்றும் கூறியவர் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பிளஸ் டூ வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ரூபாய் 1,000 ரொக்க பணமாக வழங்கப்படும்.

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூபாய் 8,000லிருந்து ரூபாய் 12,000 ஆக உயர்த்தப்படும்.

மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே அறிவித்தபடி பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையாக(குல விளக்கு திட்டம்) வழங்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று இன்று மேலும் 6 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com