தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் மாயாஜால அனிமேஷன் ஆடை!

Project Primrose Animation Dress
Project Primrose Animation Dress

ண்டுதோறும் நடக்கும் அடோப் மேக்ஸ் என்ற மாநாடில் அந்நிறுவனம் தன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும். அதன்படி இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் சிறப்பான கண்டுபிடிப்பு என்னவென்றால், நம்ப முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் ஆடை தான். 

Adobe Firefly, Adobe After effects, Adobe Stock மற்றும் Adobe Illustrator ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆடையில் நாம் விரும்பும் டிசைனைக் கொண்டு வர முடியும். இதை ஒரு சிறிய ரிமோட்டை அழுத்துவது மூலமாக எளிதாக செய்யலாம். Project Primrose என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆடை, Reflective Light-Diffuser Modules for Non-Flexible Display System தொழில்நுட்பம் மூலமாக தயாரிக்கப்பட்டதாகும். இந்த தொழில்நுட்பத்தை ஆடைகளுக்கு மட்டுமின்றி பைகள், சீட் கவர், விளம்பரப் பலகை போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும். 

இந்த ப்ராஜெக்ட் ப்ரிம்ரோஸ் ஆடை ஒரு தலை சிறந்த கண்டுபிடிப்பாகும். இது ஒரு சாதாரண ஆடையை எப்படி சிறப்பாக வடிவமைக்க முடியும் என்ற திறமையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஆனால் இந்த ஆடை வடிவமைப்பில் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் செதில் போன்ற அமைப்பு காரணமாக, சாதாரண உடையை விட எடை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த உடையை நீங்கள் அணிந்து கொண்டு ஏதேனும் நிகழ்வுக்கு சென்றால் நிச்சயம் அந்த நிகழ்வில் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக நீங்கள் தான் இருப்பீர்கள். 

அதேபோல மேக்ஸ் மாநாட்டில் அடோப் நிறுவனம் மேலும் பல ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது. அந்நிறுவனத்தின் Firefly மற்றும் Stardust-க்கான ஏஐ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இது அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர்களில் நேயர்களை கையாளாமலேயே படங்களை எளிதாக திருத்தக் கூடிய அம்சமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com