
குறிப்பிட்ட ஐபோன் வகையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு சில முக்கிய சேவைகள் நிரந்தரமாக துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் அதன் பாதுகாப்பு அம்சத்திற்கு மிகவும் பெயர் போனவை. என்னதான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் போல நம் விருப்பத்திற்கு அதை பயன்படுத்த முடியவில்லை என்றாலும், ஐபோனை கையில் வைத்துக் கொண்டு வெளியே செல்வதே, முற்றிலும் மாறுபட்ட பெருமித உணர்வை அதன் பயனர்களுக்குக் கொடுக்கும்.
சமீபத்தில், ஐபோனின் புதிய OS மேம்படுத்துதல் செய்யாத குறிப்பிட்ட சில சாதனத்தின் பயனர்கள் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால் ஐபோன் பயனர்கள் உடனே தங்களின் ஐபோனை சமீபத்திய ios பதிப்புக்கு அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஏனென்றால் IOSன் பழைய வெர்ஷனில் இயங்கும் ஐபோன்களில் சில முக்கிய அம்சங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அப்டேட் செய்யாத பயனர்கள் மேப் சேவையை அணுகவே முடியாது. மேலும் வாய்ஸ் அசிஸ்டன்டான Siri, அத்தியாவசிய பயன்பாடுகளான ஆப் ஸ்டோர் போன்றவற்றை இனி சரியான அப்டேட் இல்லாமல் ஒருபோதும் பயன்படுத்தவே முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதிய IOS பதிப்புக்கு மாறாதவர்கள் சில முக்கிய மென்பொருட்களையும் நிரந்தரமாக பயன்படுத்த முடியாது. இந்த அறிவிப்பால் iPhone 5 மற்றும் அவற்றுக்கு முந்தைய சாதனங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்கிறார்கள். ஐபோன் 7 பயன்படுத்துபவர்களும் தங்கள் போனை அப்டேட் செய்யாவிட்டால் கட்டாயம் ஏதேனும் சேவைகள் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐபோன் 7 மற்றும் அதற்குப் பிந்தைய சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கும் அப்டேட் செய்வது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை உங்கள் போனில் சிறிய ஆப்பிள் ஸ்டோர் மேப்ஸ் மற்றும் சில ஆப்பிள் சேவைகள் செயல்படவில்லை என்றாலும் உடனே உங்கள் சாதனம் புதிய அப்டேட்டில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து, உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிழையை சரி செய்யலாம்.
இந்த அறிவிப்பால் ஐபோன் பயனர்கள் உடனடியாக தங்களின் சாதனத்தை அப்டேட் செய்ய வலியுறுத்தப் படுகிறார்கள். உங்கள் சாதனத்தில் அப்டேட்டுக்கான நோட்டிபிகேஷன் வரவில்லை என்றாலும், நீங்களே உங்கள் போனில் போன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று சாஃப்ட்வேர் அப்டேட் வந்துள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
எனவே உங்கள் ஐபோன் சாதனத்தில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க, உடனே புதிய பதிப்புக்கு அதை அப்டேட் செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.