அமெரிக்காவை அலறவிட்ட ஆப்பிரிக்கத் தளபதி!

அமெரிக்காவை அலறவிட்ட ஆப்பிரிக்கத் தளபதி!

நைஜர் நாட்டில் நடந்து வரும் ராணுவப் புரட்சிக்கு எதிராக அமெரிக்காவும் பிரான்சும் நடவடிக்கை எடுத்தால், அவர்களின் மீது போர் தொடுப்போம் என ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகிலேயே அதிகமான வளங்கள் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா. ஆனால் அந்த நாட்டில் உள்ள ஊழல், அரசியல் காரணங்களால் எண்ணிலடங்க வளங்கள் இருந்தாலும், ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் வறுமையிலேயே உள்ளது. மேலும் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் அங்குள்ள வளங்களை திருட்டுத்தனமாக கொள்ளையடித்து வந்தனர். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்க்கிறோம் என்கிற பெயரில், அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகள் அங்கே ராணுவ தளவாடங்களை அமைத்து, அங்குள்ள யுரேனியம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்து வந்தனர். இதற்கு அந்நாட்டு அதிபர்களும் துணையாக இருந்ததால் அவ்வப்போது ராணுவப் புரட்சிகளும் ஏற்பட்டு வந்தது. 

இதனால் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்த பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படையினர் வெளியேறினர். இங்கே ராணுவப் புரட்சி ஏற்பட்டதற்கு ரஷ்யாவும் மறைமுக காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது நைஜர் நாட்டில் நடந்து வரும் ராணுவப் புரட்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படும் நபர் 'புர்க்கினா பாசோ' நாட்டின் ராணுவத் தளபதி இப்ராஹீம் டிராரே. 

கடந்த வருடத்தில் இவர்தான் அங்கே ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்து அதிபர் ஆனார். மேலும் தனது நாட்டில் இருந்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தளவாடங்களுக்கு சீல் வைத்து, ஆப்பிரிக்கா ஆப்ரிக்கர்களுக்கே சொந்தம் என அறிவித்தார். இவரது எழுச்சிக்குப் பிறகு மாலி நாட்டிலும் ராணுவ ஆட்சி வந்தது. ஆப்பிரிக்க கண்டத்தின் ஹீரோவாக தற்போது 35 வயதே ஆகும் இப்ராஹிம் டிராரே உருவெடுத்துள்ளார். புர்கினா பாசோ என்ற ஒற்றை நாட்டில் இவர் செய்த புரட்சி, அண்டை நாடுகளுக்கும் பரவி தற்போது நைஜர் நாட்டில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.  

மேலும் இவர் ரஷ்யா எங்களின் நட்பு நாடு என்றும் அறிவித்துள்ளார். ஏனென்றால் ஆப்பிரிக்காவில் உள்ள வளங்களை மேற்குலக நாடுகள் கொள்ளை அடிப்பதைத் தடுக்கும் விதமாக, ஆப்பிரிக்க நாடுகளில் ரஷ்யாதான் ராணுவப் புரட்சி கொண்டு வந்தது என சொல்லப் படுகிறது. இதற்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் புர்கினா பாசோ நாட்டின் ராணுவ அதிபர் இப்ராஹிம் டிராரே. இவர்தான் தற்போது நைஜர் நாட்டின் மீது மேற்குலக நாடுகள் கை வைத்தால் அவர்கள் மீது போர் தொடுப்போம் எனக் கூறி எச்சரித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com