பழம் பெருமை வாய்ந்த அண்ணாநகர் டவர் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் கோபுரத்தில் ஏற அனுமதி!

பழம் பெருமை வாய்ந்த அண்ணாநகர் டவர் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் கோபுரத்தில் ஏற அனுமதி!

சென்னை அண்ணாநகரின் டவர் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் கோபுரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் இந்த டவர் பூங்காவின் மேல் ஏறி சென்று சென்னையின் அழகை கண்டு களிக்கலாம்.

பழம் பெருமை வாய்ந்த இந்த அண்ணாநகரின் அடையாளமாகத் திகழும் டவர் பூங்காவில், முந்தைய காலங்களில் பல்வேறு சினிமா பாடல்கள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது . பழைய திரைபடங்களில் இந்த டவரின் தோற்றம் மட்டுமன்றி, பூங்காவின் அழகையும் காண ஏதுவாக இருந்தது.

சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கோபுரத்தின் உயரம் 135 அடி. 12 அடுக்குகள் கொண்ட இந்த டவரில் ஏறினால், சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளின் அழகையும் ரசிக்கலாம்.

சென்னை அண்ணாநகரில் உள்ள இந்த டவர் பூங்காவில் கலையரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவைகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சில அசம்பாவித சம்பவங்களால் இந்த பூங்காவில் உள்ள டவரில் மக்கள் ஏற கடந்த 2011ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பூங்காவிற்கு நடைபயிற்சி செல்வோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த பூங்கா 97 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மாநகராட்சி நிதி ஒதுக்கீட்டில் நடந்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இனி பொதுமக்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த டவர் பூங்காவில் ஏறி சென்று மேலே நின்று ரசிக்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com