சென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் ‘Happy Street‘ கொண்டாட்டம் விரைவில்!

மாதிரி படம்
மாதிரி படம்

ஜூலை 23ஆம் தேதி திருச்சி கோர்ட் அருகே உள்ள ஸ்டுடென்ட் ரோட்டில் ஹாப்பி ஸ்ட்ரீட்  கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்கு, ஞாயிற்றுக்கிழமைகள் வரப்பிரசாதங்கள். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வு எடுக்கலாம், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம்,  நண்பர்களை சந்திக்கலாம், விளையாடலாம், மகிழ்ச்சியாக பொழுதை போக்கலாம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனி டைம் டேபிள் போட்டு வைப்பார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதற்கு ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் வயது வரம்புின்றி, பாலின பேதம் இன்றி, எல்லோரும் ஒன்று கூடி, ஆடி பாடி கொண்டாடினர். இந்த திட்டம் சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மதுரையிலும், கோவையிலும் ஹாப்பி ஸ்ட்ரீட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருச்சியிலும் ஹாப்பி ஸ்ட்ரீட் திட்டம் முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி கோர்ட் அருகே உள்ள ஸ்டூடன்ட் ரோட்டில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் சாலையில் தான் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அதனாலயே அந்த பகுதி ஸ்டூடண்ட் ரோடு என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com