மீண்டும் பொது சிவில் சட்டம்: பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க ஒரு மாத கால அவகாசம்!

மீண்டும் பொது சிவில் சட்டம்: பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க ஒரு மாத  கால அவகாசம்!
Published on

பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளை இந்திய சட்ட ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை விவகாரங்களில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென தனிச் சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வந்தது.

பொது சிவில் சட்டம் குறித்து புதிதாக ஆராய முடிவெடுத்துள்ள சட்ட ஆணையம், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள், ஒரு மாத காலத்திற்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது இந்திய சட்ட ஆணையம். அதாவது, அனைத்து மதத்தை சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிா்ப்புகளும் எழுந்துள்ளன.

இது சிறுபான்மையினருக்கு எதிராக அமையும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே, இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, கருத்துக் கேட்பை நடத்துமாறு கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக அடுத்த

கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தனிப்பட்ட மத சட்டங்களில் உள்ள பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை சமாளிக்க, மதங்களில் இருக்கும் குடும்பச் சட்டங்கள் திருத்தப்பட்டு குறியிடப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இந்த பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தற்போது 22வது சட்ட ஆணையம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் என்று அது மேலும் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com