2030க்குள் மனித இனம் அழியும் - AI ஆய்வாளர் விடுத்த பகிர் எச்சரிக்கை..!!

OpenAI, Anthropic நிறுவன முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் முன்வைக்கும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்!
AI ஆபத்து
AI ஆபத்து
Updated on

2030க்குள் எல்லாமே முடிந்து விடும் என ஏஐ ஆய்வாளர் விடுத்த பகிர் எச்சரிக்கையால் பரபரப்பு தொற்றி உள்ளது.

ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) என்ற AI ஆராய்ச்சியாளர், செயற்கை நுண்ணறிவு குறித்து மிகவும் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு, தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளார்.

சுமார் 27 வயதுடைய இளம் AI ஆராய்ச்சியாளரான இவர் முன்பு OpenAI நிறுவனத்திலும், பின்னர் ANTHROPIC நிறுவனத்திலும் பணியாற்றி செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் 2030-ம் ஆண்டுக்குள் மனித குலமே அழியும் பேராபத்து உள்ளதாக பகீர் எச்சரிக்கை விடுத்ததுடன் தற்போது தான் பணி புரிந்த Anthropic-ல் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் அதாவது ராஜினாமா செய்துள்ளார்.இவர் AI மாடல்களின் முன்-பயிற்சி (pretraining) மற்றும் AI-யின் உள்ளார்ந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Anthropic open AI ஆகிய நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் “தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ளக்கூடிய கட்டுக்கடங்காத சூப்பர் இன்டெலிஜென்ஸ் (superintelligence) " தொழில்நுட்பத்தை உருவாக்க போட்டி போட்டு வருவதாக ஆய்வாளர் என்ற முறையில் ஜேக்கப் காக்சன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.குறிப்பாக எதையும் ஹேக் செய்யும் ஆற்றலும் , சமூகத்தை மாற்றி அமைக்கும் அதிகாரமும் கொண்ட ஏஐ அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆபத்தான போட்டியை நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காக்சன், OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்கள் சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் மிக வேகமாக ஓடுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.அவரது கருத்துப்படி, நிறுவனங்கள் AI-யின் ஆபத்துகளை அறிந்திருந்தாலும், தன்னை விட மற்ற நிறுவனம் முதலில் உருவாக்கிவிடக் கூடாது என்ற போட்டி மனப்பான்மையால் பாதுகாப்பை விட வேகத்திற்கு முக்கியத்துவம் தருவது நன்மை தராது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“AI மனித இனத்தையே அழிக்கலாம்” என்று காக்சன் கூறுவதற்கான காரணங்களையும் அவரே பட்டியலிடுகிறார். AI தொடர்ந்து தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சென்றால், ஒரு கட்டத்தில் அதன் திறன் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்றும் அத்தகைய சூப்பர் இன்டெலிஜென்ஸ்க்கு

சைபர் தாக்குதல்கள் நடத்தும் திறன்,புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மிக வேகமாகச் செய்யும் திறன்,AI-யையே மேம்படுத்தும் திறன்,கணினி மற்றும் பிற வளங்களைப் பெறும் திறன் ஆகியவைகள் கிடைக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

காக்சனின் எச்சரிக்கை மற்றும் கருத்துக்கு Anthropic-ல் பணியாற்றும் எவன் ஹூபிங்கர் (Evan Hubinger) என்பவரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையில், அடுத்த 10 ஆண்டுகளில் AI மனித இனத்தை அழிக்கும் வாய்ப்பு 10%-ஐ விட அதிகம் என நம்புவதாக அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் தற்போதைய AI மாடல்களால் உடனடியாக அத்தகைய ஆபத்து குறைவு என்றும், தன்னைத்தானே மேம்படுத்தும் superintelligence தான் முக்கிய கவலை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AI-யை தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் superintelligence நிலைக்கு கொண்டு செல்லும் போட்டி, போதுமான பாதுகாப்பு மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடந்தால், மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம் என்பதே அவரது எச்சரிக்கை.

AI தன்னைத்தானே மேம்படுத்தத் தொடங்குவது என்பதை பற்றி வல்லுநர்கள் கூறியது இதுதான். இப்போது AI-யை மேம்படுத்துவது பெரும்பாலும் மனிதர்கள்தான். ஆனால் AI தானாக code எழுதுவது, தன்னுடைய தவறுகளைக் கண்டுபிடிப்பது,புதிய AI மாடல்களை வடிவமைப்பது, பரிசோதனைகளை தானாக நடத்துவது

என்ற நிலையான மீள்சுழற்சிமுறைத் தன்னுயர்வு (Recursive Self-Improvement) பெற்றால் AI-யை மேம்படுத்தும் வேகம் மனிதர்களை விட அதிகமாகலாம் என்றும்

மேலும் காக்சன் குறிப்பிட்ட Anthropic-ம் தற்போது AI development-ல் AI-ஐ அதிகமாக பயன்படுத்துவது வேகத்தை அதிகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் AI தனது successor-ஐ தானே உருவாக்கும் நிலை வரக்கூடும் என்றும் ஆனால் அது இன்னும் நிகழவில்லை என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்புகள் கூறுகிறது.

மேலும் AI development AI version 1 → version 2 → version 3 என்று மனிதர்கள் கண்காணிக்க முடியாத வேகத்தில் முன்னேறினால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நேரமே மனிதர்களுக்கு இல்லாமல் போகலாம் என்பது நிரூபணமாகும் காலத்தில் ஒருவேளை காக்சன் கூறியது நிகழும் வாய்ப்பு இருக்கலாம்.

காக்சன் கூறியது போல நமது கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஏஐ நம்மை கட்டுப்படுத்தும் முன் அரசு மற்றும் ஏஐ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதிகம் AI யூஸ் பண்ணினா நீங்களும் ரோபோவா மாறிடுவீங்க... ஷாக்கிங் ரிப்போர்ட்!
AI ஆபத்து
logo
Kalki Online
kalkionline.com