AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது : பில்கேட்ஸ்!

AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது : பில்கேட்ஸ்!
Published on

லக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது என்று தெரிவித்துள்ளார்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்பவர் பில் கேட்ஸ். பணக்காரர் என்பதை தாண்டி இவருடைய செயல்பாடுகள் பேச்சுகள் உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும். அந்த அளவிற்கு தொழிலைக் கடந்த பல்வேறு வகையான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்.

இந்த நிலையில் பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது, வரக்கூடிய காலங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சங்களாக இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை முன்னோக்கி வழிநடத்தும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இவர்கள் செய்யும் வேலையை இக்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும்.

ஆனால் ஒருபோதும் மனிதர்களுடைய வேலையை தொழில்நுட்பத்தால் பறிக்க முடியாது. மனிதர்கள் தான் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகளுக்கு ஒருபோதும் பிரச்சனைக்கு ஏற்படாது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஒருபோதும் ஈடாகாது. அதே சமயம் மனிதர்களின் வேலை நாட்கள் வருங்காலங்களில் குறையும். வருங்காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மனிதர்கள் வேலை செய்யக்கூடிய சூழல் உருவாக கூடும்.

உழைத்து பழக்க பட்ட மனிதர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கான சவால்கள் எளிதாகும். வேலைப்பளு குறையும். அதேநேரம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டே ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நகர்த்த நினைப்பதும் அர்த்தமற்றது என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com