நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் உங்களிடம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அறிந்துகொள்ள ஒரு AI தொழில்நுட்பம் உதவிசெய்யவுள்ளது.
பலரது வீட்டில் குழந்தைகள் போல் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. முந்தய காலங்களிலும் ஆடு, மாடு, கோழிகள் செல்லமாகவே வளர்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் வீட்டிற்கு வெளியே ஒரு கொட்டத்தில் கட்டப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய காலத்தில் நாய், பூனை, கிளி, புறா என அனைத்தையும் வீட்டிற்குள் வளர்த்து வருகிறார்கள். குழந்தை போல் செல்லப்பிராணிகளையும் மெத்தையில் ஏசி போட்டு தூங்க வைக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய கவலை ச்சே நம்ம செல்லபிராணிகள் பேசினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைப்பார்கள். இவர்களுக்காக வந்து விட்டது ஒரு தொழில்நுட்பம். AI தற்போது அனைத்து வேலைகளையும் எளிதாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த ஒரு வேலையையும் செய்யவுள்ளது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, லிங்கன் பல்கலைக்கழகத்தின் கால்நடை நடத்தை பேராசிரியரான டேனியல் மில்ஸ், AI தொழில்நுட்பம் உதவியுடன் விலங்குகளுக்கும் நமக்கும் இடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார். சமீப காலமாக பல்வேறு துறைகளில் AI தனது பங்களிப்பை அளித்து வருவது போல், செல்லப்பிராணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்றும், நமது செல்ல பிராணிகளை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
செல்லப்பிராணிகளுக்கு பல முகபாவனைகள் இருப்பதால், அவற்றைப் புரிந்துகொள்ள AI நமக்கு உதவும் என்று டாக்டர் பிரிட்டானி கூறினார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், அதன் காதுகளின் நிலை போன்ற குறிப்பிட்ட குணாதிசயங்களைப் பார்த்து, செல்லப்பிராணிகள் என்ன கூறுகின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று மில்ஸ் கூறுகிறார்.
தற்போது, மில்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஆன்லைனில் கிடைக்கும் செல்லப்பிராணிகளின் வீடியோக்களில் இருந்து AI அமைப்பை உருவாக்கி வருகின்றனர், இது நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளின் உரையாடல்களைப் புரிந்துகொள்ள நம் அனைவருக்கும் உதவும் என கூறப்படுகிறது. இதையெல்லாம் சாமானியர்கள் பயன்படுத்தாவிட்டாலும், விலங்குகள் நலத் துறையில் செயற்கை நுண்ணறிவால் நமக்கு உதவ முடியும் என்றார். மில்ஸ் குழு அதன் AI அமைப்பை வீடியோக்களுடன் பயிற்றுவிக்கிறது.