வேஷ்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய அதிமுக எம்.எல்.ஏ..!

admk mla
admk mla
Updated on

விவசாயிகளோடு ஒருவராக வேஷ்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வயல்வெளியில் பெண்கள் நாற்று நடுவதைக் கண்டவுடன் உடனடியாக வேஷ்டியை மடித்து கட்டி வயலில் இறங்கி நாற்று நடத் தொடங்கினார். விவசாயம் செழிக்கவும், விவசாயிகளுக்கு தோள் கொடுக்கவும், எடப்பாடி ஆட்சி அமையவும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

இவருடைய இந்த யதார்த்தமான அணுகுமுறை அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: பீகார் அமைச்சரவை கலைக்கப்பட்டது... நிதிஷ்குமார் ராஜினாமா..!!
admk mla
logo
Kalki Online
kalkionline.com