#BREAKING : கோவை தெற்கில் தேர்தலை நிறுத்த கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா..!

அம்மன் அர்ஜுனன்
அம்மன் அர்ஜுனன்Source:maalaimurasu
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தற்போது தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார். 

கோவை தெற்கு தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் உடனடியாக இந்த தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெற்குத் தொகுதியில் போட்டியிடக் கூடிய அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மூன்று முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். பணப்பட்டு வாடா நடக்கும் போது கட்சியினரே பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தாலும் பறக்கும் படையினர் அங்கு வருவதற்கு மிகவும் தாமதமாக வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட தர்ணாவை கைவிட மாட்டோம் என்றும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com