பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி: எடப்பாடி அதிரடி!

பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி: எடப்பாடி அதிரடி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியே தொடருகிறது என்பதுதான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களின் கருத்தாகவும் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்றே கூறி இருந்தார். இதனை அதிமுக தலைவர்களும் ஆமோதித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை பெரிதும் விமர்சித்து வந்தார். அதோடு, ’அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களின் ஊழல்களையும் வெளியிடுவோம்’ எனவும் கூறி இருந்தார். இதற்கு அதிமுகவும் பதிலடி தந்தது. அதேநேரத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் என்றும் பார்க்காமல் எடப்பாடி பழனிசாமியை மிகவும் இழிவாக விமர்சித்திருந்தனர்.

அதேசமயம், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுகவும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், பாஜக மேலிடம் அதிமுகவுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் பாஜகவின் அடுத்தடுத்த நிலைகள் அதிமுக தலைமையை மிகவும் கொந்தளிக்க வைத்தது.

இந்த நிலையில், தற்போது திடீரென பாஜகவை எதிர்த்து கர்நாடக தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்து,  அந்தத் தொகுதிக்கு பாஜக சார்பில் முரளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவராக இருக்கும் அன்பரசனை வேட்பாளராகவ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக மீதான தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடப்போவதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com