#BREAKING : காசோலை போல துண்டுப் பிரசுரம்... அதிமுகவிற்கு எதிராக வழக்கு..!

admk 10000 coupon
admk 10000 coupon
Updated on

ரூபாய் 2,000, ரூபாய் 10,000 காசோலை போல அதிமுக துண்டு பிரசுரம் வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அதிமுகவுக்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காசோலை போல அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com