அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் - முழு விவரம்

மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடைபெறவிருக்கும் மெகா அரசியல் இணைப்பு விழா: அதிரப்போகும் தமிழகம்.
Vijay and ex minister
Vijay vijayabaskars
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

அதிமுகவில் கரூர் மாவட்டத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கர், சபாநாயகரை சந்தித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் 7 வது தொகுதியாக கரூர் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பெரும் தோல்வியை சந்தித்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுக வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அது சட்டமன்றத்தில் 3 வது இடம் பெற்றதில்லை. தவெக ஆட்சியில் திமுகவும் அதிமுகவும் ஒருசேர எதிர் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து வருவதாலும் , இந்த தோல்விகளுக்கு காரணமான எடப்பாடி பழனிச்சாமியின் மீதான அதிருப்தி காரணமாகவும், அதிமுகவினர் தொடர்ச்சியாக தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். தங்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிமுகவினர் தவெகவில் இணையும் முயற்சி இணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 16 ஆம் தேதியே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதற்கு ஆர்வமாக இருந்த அவர், ஒரு சில நாட்களாகவே அமைதியா காத்து வருகிறார்.

தற்போது இவரும் எம்.ஆர்.விஜய பாஸ்கரும் இணைந்து நாளை மறுநாள் தவெகவில் இணைகிறார்கள். இவர்களுடன் ஏராளமான அதிமுகவினரும் இணைகிறார்கள். இந்த இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் , தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவினர் தங்களது கட்சியிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறுவது அதிகரித்துள்ளது. அந்தக் கட்சியும் வெளியேறுபவர்களை தடுக்க விரும்பவில்லை. இதனால் அந்த கட்சி பெருமளவு பலத்தினை இழந்து காணப்படுகிறது. இன்று கொங்கு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க வேலுமணியும் கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

C.Vijaya baskar and M.R. Vijaya baskar
both Vijayabaskars resigned

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான பின்னர் , விஜய் ஆட்சி அமைப்பதற்காக அதிமுகவின் ஆதரவினை கோரி இருந்தார். அதற்கு ஒப்புக் கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி , திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் அறிந்த சி. வி.சண்முகமும் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீண்ட காலம் தங்களின் முழு எதிரியாக திமுகவை சித்தரித்தே தங்கள் அரசியல் செய்து வந்ததால், திமுகவிற்கு ஆதரவு கொடுத்தால் தங்களின் எதிர்காலம் கருதி , எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்தனர். வேலுமணியும் சிவி.சண்முகமும் இணைந்து 30 சட்டமன்ற உறுப்பினர்களுடன் , தாவிக்கவை ஆதரித்து அமைச்சர் பதவிகளை பெற திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலுமணி மற்ற எம்எல்ஏக்களுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சமாதானம் செய்தார் ஆனால், சிவி.சண்முகம் , சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தனித்தே இயங்கி வந்தனர். தற்போது சிவி.சண்முகம் உடனடியாக எந்த கட்சியிலும் இணையாமல் அமைதியாக இருக்கிறார். அதேநேரம் அதிமுகவிலிருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவை நோக்கி வர தயாராக இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. வேலுமணியும் அவரது நெருங்கி வட்டாரத்தை சேர்ந்த சிலரும் விரைவில் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com