

சட்டப்பேரவையில் இன்று பொதுக் கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS), கறிக்கோழி விற்பனை மற்றும் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேச முற்பட்டார். ஆனால், உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி சபாநாயகர் அவருக்கு அனுமதி மறுத்தார்.இதை எதிர்த்து ஆட்சேபித்த அதிமுகவினர் இபிஎஸ் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன் தமிழக அரசையும் சபாநாயகரின் எதிர்த்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கோரிக்கையை ஏற்று நாளை விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என்றும் அமைச்சர்கள் பதில் தயாரித்துக் கொண்டு வர வேண்டும் எனவே நாளை விவாதிக்கலாம் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நேரமில்லாத நேரத்தில் ஒரு பொருள் குறித்த விவாதிக்க முன்கூட்டி அனுமதி வாங்க வேண்டும் என்பதுதான் முறை என சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதத்திற்கு ஏற்பதாக அரசு அறிவித்த பிறகும் அதை ஏற்காத அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பம் எழுந்த இந்நிலையில் பொது கணக்கு குழு அறிக்கை முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டது .
விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு கூட அதிகாரம் இல்லையா என அதிமுகவினர் கேள்வி .சபாநாயகர் தனது சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறார் எனவும் அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து சபாநாயகருக்கு எதிராகவும் மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் தற்போது முழக்கம் இட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இபிஎஸ் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து கறிக்கோழி விற்பனை மற்றும் விவசாயிகள் பிரச்சினை பட்டியலிட்டு இந்த அரசு இதை புறக்கணிப்பது ஏன்..? இதை விவாதிக்க 2 நிமிட அவகாசம் கூட தர மறுப்பது நியாயமா என பேசினார்.
அதிமுக தேர்தல் அறிக்கையை தான் திமுக காப்பியடிக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது எனவும் மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விவசாயிகளின் முக்கிய பிரச்சினை அரசு கவனத்திற்கு கொண்டுவர அனுமதி கேட்டோம் ஆனால் கொடுக்கவில்லை. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நேற்றே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து விட்டோம். இன்றே விவாதிப்பதில் என்ன பிரச்சனை விவசாயிகள் ஆறு மாதமாக போராடும் நிலையில் இன்றை அவசரமாக விவாதிப்பதில் என்ன பிரச்சனை என இபிஎஸ் கேள்வி
கடந்த ஆறு மாதங்களாக கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராடுவது தமிழக அரசுக்கு தெரியாதா மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து திமுக அரசு பின் வாங்கியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை இபிஎஸ் முன் வைத்தார்.