அதிமுகவின் மூன்றாவது மிகப் பெரிய சக்தி இபிஎஸ்...

அதிமுகவின் மூன்றாவது மிகப் பெரிய சக்தி இபிஎஸ்...

உலக நன்மைக்காக மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய “ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம்” 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கமிட்டி தலைவர் அருணாச்சல வாத்யார், சேது வாத்யார், ஸ்ரீதர் வாத்யார், சேது வெங்கட்ராமன் வாத்யார், சந்திரசேகரன் வாத்யார், சத்யநாராயணன் வாத்யார் உள்ளிட்ட 170 பேருக்கும் மேற்பட்ட வேதவிற்பனர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், அவரது மகள் யு.பிரியதர்ஷினி, தாயார் மீனாள் ஆகியோர் பங்கேற்று வேத விற்பனர்களுக்கு 51 சமத்துவ சமுதாயம் திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை அட்சயபாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஆர். பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நடத்துவது தொடர்பாக கருத்து கேட்டு, சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ருது ராஜ், ‘அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இது மிகுந்த சதோஷத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. ஒன்றரைக்கோடி தொண்டனுக்கும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் வளர்த்தெடுத்து இன்று இந்தியாவிலே மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாகி இருக்கிறது அ.தி.மு.க.

அதிமுகவின் மூன்றாவது மிகப் பெரிய சக்தி அண்ணன் இபிஎஸ்... மிக விரைவிலே ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கை பெற்று மீண்டும் முதலமைச்சராக வருவார்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு வழி வகுத்து கொடுத்திருக்கிற அறிவிப்பாகத்தான் “பொதுச் செயளாலர் எடப்பாடி“ என்றஆணையத்தின் கடிதம் அமைந்துள்ளது.

 பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து, முதல்முதலாக உரிமைக் குரல் எழுப்பி, மக்களுக்கு கரும்பை வழங்குவதோடு, அரசை நம்பி செங்கரும்பை விதைத்திருக்கிற விவசாயிகள் வாழ்விலே ஒளி ஏற்றுகின்ற வகையிலே அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 5,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பியவர் எடப்பாடியார்.

விவசாயிகளும், பொதுமக்களும் மணமகிழ்ச்சியோடு எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து வருவது நம் உள்ளத்தை நெகிழச் செய்கிறது என்று முன்னால் அமைச்சர் உதயகுமார் பெருமிதத்துடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com