#BREAKING : விமான விபத்து! நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் தீயணைப்பு வாகனம்..!

AIR CANADA
AIR CANADA
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில், மார்ச் 23, 2026 அன்று நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மான்ட்ரியல் நகரில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express CRJ-900) விமானம், ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

சம்பவம் நடந்தது எப்படி?

இரவு சுமார் 11:37 மணியளவில், டெல்டா முனையப் பகுதியில் உள்ள ஓடுபாதை 4-ல் (Runway 4) இந்த ஏர் கனடா விமானம் தரையிறங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் குறுக்கே வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானத்தின் முன்பகுதி பலமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் விமானத்தின் மூக்கு (Nose) பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த நான்கு வீரர்கள் படுகாயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே நியூயார்க் நகர தீயணைப்புத் துறை (NYCFD) மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், காயங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விபத்தைத் தொடர்ந்து லாகார்டியா விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு, அவசரநிலை (Emergency) பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது காலதாமதப்படுத்தப்பட்டன.

ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் தீயணைப்பு வாகனம் அங்கு எப்படி வந்தது? சிக்னல் கோளாறா அல்லது மனிதத் தவறா? என்பது குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com