

இன்று அதிகாலை புதன்கிழமை (மார்ச் 11, 2026) ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து , தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX938) என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 133 பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர். தாய்லாந்து நேரப்படி அதிகாலை 4:24 மணியளவில் புகெட் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கும் பொழுது வேகமாக வந்து தரையை தொட்டதில் "ஹார்ட் லேண்டிங்" (Hard Landing) ஆனது. இந்த சம்பவத்தின் போது விமானத்தின் முன்பக்க சக்கரம் பலத்த சேதமடைந்து வெடித்தது. இதனால் விமானத்தின் முன் பகுதி ஓடுதளத்திலிருந்து சற்று உயரத்தில் நின்று கொண்டுள்ளது. டயர் வெடித்த சத்தத்தை கேட்ட பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். சர்வதேச அளவில் நடைபெறும் போரின் நினைத்து அவர்கள் பயந்தனர்.விமான ஊழியர்கள் நிலைமையைக் கூறி அவர்களை அசுவாசப்படுத்தினார்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 133 பயணிகளும் எந்தவித காயமும் இன்றி விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரையும் ஏர் இந்தியா விமான நிறுவனம் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இவற்றில் பாதிக்கப்பட்ட விமானம் ஓடுதளத்தின் நடுவே நின்றதால், புகெட் சர்வதேச விமான நிலையத்தின் ஒரே ஒரு ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளன. சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
தற்போது ஓடுதளத்தில் சிக்கியுள்ள ஏர் இந்தியா விமானத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் தாய்லாந்து விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதா?அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.