ஏர் இந்தியா விமானத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியா விமானத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியா விமானி ஒருவர் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதி தனது தோழியை காக்பிட்டுக்கு பகுதிக்கு அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ. 30 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா விமான ஒன்று புதுடெல்லியை நோக்கி புறப்பட்டது. அப்போது, இந்த விமானத்தை இயக்கி விமானி ஒருவர் காக்பிட் என்றழைக்கப்படும் விமானிகள் அறைக்குள் தன்னுடைய தோழியை அழைத்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் படி விமானிகளை தவிர வேறு யாரும் விமானிகளின் அறைக்குள் நுழைய கூடாது. இது விதிகளை மீறிய செயலாகும். இது குறித்து புகார் அளித்த பிறகும் ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ 30 லட்சம் அபராதாம் விதித்திருக்கிறது. அத்துடன் பணியிலிருக்கும் ஊழியர் போல தோழியை காக்பிட் அறைக்குள் உடன் பயணிக்க வைத்த விமானியின் பைலட் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தி வைத்ததுடன் உடன் பயணித்த பெண் தோழியின் மீது துறை ரீதியான நிர்வாக நடவடிக்கை எடுக்குமாறும் விமான நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், சம்பந்த பெண்ணுக்கு விமான நிர்வாகப் பணியில் ஏதேனும் தொடர்பு இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு நிர்வாகச் செயல்பாடுகளில் இருந்து அந்த பெண்ணை நீக்குவது உட்பட சில உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் AI (Air India) வுக்கு DGCA (Directorate General of Civil Aviation) ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று ஏர் இந்தியா -102 நியூயார்க்-டெல்லி விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணித்த பெண் பயணி மீது, ஆன் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி ரூ30 லட்சம் அபராதமும், தொடர்ந்து அதே ஆண்டில் ஏர் இந்தியா-142 பாரிஸ்- டெல்லி விமானத்தில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்திலும் புகாருக்கான சரியான நடவடிக்கையின்மையைச் சுட்டிக்காட்டி ரூ 10 லட்சம் அபராதமும் ஏர் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com