டெல்லியில் காற்று மாசு எதிரொலி: பள்ளிகளில் ஆனலைன் வகுப்பு நடத்த உத்தரவு!

காற்று மாசு எதிரொலி
காற்று மாசு எதிரொலி

டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச எல்லை மாவட்டங்களில் காற்று மாசு தீவிரமாக அதிகரித்துள்ளதை அடுத்து, நொய்டாவில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லியில் சூழ்ந்துள்ளது. இதனால்  உத்திரப்பிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள நொய்டா நகரத்தில் காற்றின் தரம் அபாயகரமான அளவான 562 புள்ளிகளையும்,  ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள குருகிராமி 539 புள்ளிகளை எட்டியுள்ளதாக தேசிய வானிலை முன்னறிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 8-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும்  9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் முடிந்தவரை ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யுமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com