கன மழை காரணமாக விமான சேவை பாதிப்பு!

கன மழை காரணமாக விமான சேவை பாதிப்பு!

சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. கனமழை காரணமாக பன்னாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழலால் அணைத்து விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப் பட்டன. சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. இதனால் பயணிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டது. சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டுப் பறந்தன. பின்னர் 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. வானிலை சீரானதும் விமானங்கள் சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், அந்தமான், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக பன்னாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com