அகிலேஷ் யாதவின் கூட்டணி பார்முலா. முன்னாள் முதல்வர் மாயாவதி கிண்டல்!

அகிலேஷ் யாதவின் கூட்டணி பார்முலா. முன்னாள் முதல்வர் மாயாவதி கிண்டல்!

2024 மக்களவைத் தேர்தலில் பிற்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒன்றுபட்டால் பா.ஜ.க.வை நிச்சயம் தோற்டிக்க முடியும் என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத்  தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிடிஏ பார்முலாவை செயல்படுத்தினால் பா.ஜ.க.வை மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று கூறியிருந்தார். (அதாவது பிச்சேதி –பிற்பட்ட வகுப்பினர், தலித்- தலித் மக்கள், அல்பாசங்யாக்- சிறுபான்மையினர் (பிடிஏ) இணைந்தால் பாஜகவை வெல்லமுடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.)

இந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ள பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி, பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ.வை எதிர்கொள்ள பிடிஏ பார்முலாவை பின்பற்றலாம் என்று அகிலேஷ் சொல்வது பேசுவதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

அகிலேஷ் கூறும் பிடிஏ பிற்பட்ட வகுப்பினர், தலித், சிறுபான்மையினரை குறிப்பதல்ல, பரிவார், தல் அல்லையனஸ் ஆகும். அதாவது குடும்பம், கட்சி, கூட்டணி அரசியலாகும். எனவே பிற்பட்ட  வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மையினர் அகிலேஷ் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாயவதி கூறியுள்ளார்.

வருகிற 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி பிடிஏ பார்முலாவை அகிலேஷ் முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சமாஜவாதி கட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடம்பெறவில்லை.

கடந்த 2019 பொதுத் தேர்தலில் உ.பி.யில் அகிலேஷ், மாயாவதி இருவரும் சேர்ந்து பா.ஜ.க.வை எதிர் கொண்டனர். ஆனாலும் பா.ஜ.க.வின் வெற்றியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. 62 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com