10 வருஷமா சிலிண்டரே இல்லாம 1,500 பேருக்கு சமையல்! இந்தியாவுக்கே பாடம் எடுக்கும் ஒரு பள்ளி..!

PRABHAT DAY BOARDING SCHOOL
PRABHAT DAY BOARDING SCHOOL image sourcee: thebetterindia
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on: 

மகாராஷ்டிரா மாநிலத்தில், அகோலாவில் உள்ள பிரபாத் டே போர்டிங் பள்ளியில் LPG இல்லாமலேயே தினமும் 1,500 பேருக்கு உணவை சமைக்கிறார்கள்... அதுவும் 10 வருடமாக.. எப்படி என்று பார்க்கலாமா..

உலகம் முழுவதும் LPG சப்ளை சரியாக இல்லாத காரணத்தினால் திண்டாடி கொண்டிருக்கும் வேளையில்,மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலாவில் உள்ள ஒரு பள்ளி, கடந்த 10 ஆண்டுகளாக சமையல் எரிவாயு (LPG) இல்லாமலேயே 1,500 பேருக்கு உணவு சமைத்து வருவது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செலவுகளை குறைக்கவும், சமையலறை பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்தப் பள்ளி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே எல்பிஜி பயன்பாட்டிலிருந்து மாறியது. விவசாயக் கழிவுகளை எரிபொருளாகவும், வெப்ப திரவ வெப்பமூட்டும் அமைப்பையும் பயன்படுத்துவதன் மூலம், இந்த நிறுவனம், வழக்கமான எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையை அறவே ஒழித்திருக்கிறது.இதன் மூலம் சமையல் செலவு பெருமளவு குறைந்துள்ளதோடு, பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சமையலறையில் நேரடித் தீப்பிழம்புகள் இல்லாத 'தெர்மல் ஃபுளூயிட் ஹீட்டிங்' (Thermal Fluid Heating) முறை பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்படும் பயிர்க்கழிவுகளைக் கொண்டு எண்ணெய் சூடாக்கப்பட்டு, அந்த வெப்பம் குழாய்கள் வழியாகச் சென்று பெரிய சமையல் பாத்திரங்களைச் சூடுபடுத்துகிறது. இது எரிவாயு அடுப்புகளை விடச் சீரான வெப்பத்தைத் தருகிறது.

அந்த பள்ளியின் சமையலறை ஊழியர்கள் கூலாக டென்ஷனில்லாத ஒரு பணிச்சூழல் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.அதவாது மகாராஷ்டிராவின் கடுமையான கோடை காலத்திலும், நேரடித் தீ இல்லாததால் சமையலறை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதாக ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.வழக்கமான அடுப்புகளின் வெப்பம் மற்றும் புகைச்சல் அவர்களுக்கு அறவே கிடையாது.

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை, சிலிண்டர்கள் இல்லாததால் எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு போன்ற அபாயங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயிலும் ஒரு கல்வி நிறுவனத்தில், இத்தகைய விபத்தில்லாச் சூழல் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாகப் பள்ளி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த பள்ளியினுடைய இத்தகைய மாற்றமானது, நாடு முழுவதும் உள்ள நிறுவன சமையலறைகளுக்கு விரிவாக்கக்கூடிய ஒரு தீர்வை வழங்குகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிலிண்டர்கள் இல்லாதது எரிவாயு கசிவுகள் அல்லது வெடிப்புகளின் அபாயத்தை நீக்குகிறது. இதன் மூலம், ஒவ்வொரு மதியமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலும் கிடைக்கிறது.சுற்றுச்சூழல் ரீதியாகப் பார்த்தால், இந்தப் பயோமாஸ் முறை கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், விவசாயிகள் தங்களது பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசைக் குறைத்து, அந்தக் கழிவுகளுக்கு ஒரு சந்தை மதிப்பை உருவாக்கித் தருவதன் மூலம் உள்ளூர் விவசாயப் பொருளாதாரத்திற்கும் இப்பள்ளி வலுசேர்க்கிறது.

உலகளாவிய போர் பதற்றங்களால் எரிபொருள் விலை உயர்ந்து வரும் வேளையில்,பிரபாத் பகல்நேர உறைவிடப் பள்ளி, விலை உயர்வுகளாலும் தட்டுபாட்டினாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறது.இந்த அமைப்பு முதலில் பெரிய அளவு சமையலறை செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது, ஆனால் காலப்போக்கில் இது மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு பாடமாக உருவெடுத்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி-யைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாற்றம் "மிகக் குறைவான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும்" மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

வணிக ரீதியான சமையல் எரிவாயுவை நம்பியிருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு, இப்பள்ளியின் 10 ஆண்டுகால வெற்றிப் பயணம் ஒரு நிலையான மற்றும் சிக்கனமான தீர்வை வழிகாட்டியாகக் காட்டுகிறது.

பரவலாக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நிறுவனங்கள் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த பள்ளியில் முன்னதாகவேக கடைபிடித்துக் கொண்டிருக்கும் மாற்றத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி இந்த துறையில் வேலை செய்பவர்களும் தபால் ஓட்டு போடலாம்..!
PRABHAT DAY BOARDING SCHOOL
logo
Kalki Online
kalkionline.com