உங்க போனுக்கு அபாய எச்சரிக்கை மெசேஜ் வருதா? இதுதான் காரணம்!

அலெர்ட் மெசேஜ்
அலெர்ட் மெசேஜ்
Published on

பேரிடர்களின் போது அவசர தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை திட்டத்தின் சோதனை நடந்து வருகிறது.

நாட்டில் பல்வேறு தேசிய பேரிடர்கள் நடந்து கொண்டு தான் வருகிறது. புயல், வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு என பல்வேறு பேரிடர்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் தற்காத்து கொள்ளமுடியும். தற்போது 100 சதவீத மக்களும் தொலைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். அதில், பாதிக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் போன் உபயோகித்து வருகின்றனர். இதில் பல நல்லது இருந்தாலும், தீமைகளும் அதே அளவு உள்ளன.

ஏதேனும் மெசேஜை தொட்டால் அக்கவுண்டில் உள்ள மொத்த பேலன்ஸும் காலியாகிவிட்டதாக கூட கதையுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏதேனும் மெசேஜ் வந்தால் பார்க்க கூட பயப்படுகிறார்கள். அப்படி இன்று மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஒரு மெசேஜ் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுவும் விடாமல் அலெர்ட் சவுண்டுடன் வந்த மெசேஜால் கிராமபுரங்களில் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

அந்த குறுந்தகவலில் ‘எச்சரிக்கை - அதிதீவிரம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், “இது வெறும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. இதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை” என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தி பொது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் விழிப்பூட்டல்களை வழங்குவதற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அவசர எச்சரிக்கை சமிக்ஞை முறையின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் வருங்காலங்களில் ஏதேனும் மக்களுக்கு அலெர்ட் செய்யப்பட வேண்டுமென்றால் இது போன்று ப்ளாஷ் மெசேஜ் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வந்த மெசேஜ் இதற்கு சோதனையே என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், நாட்டின் பெரிய மொபைல் நெட்வெர்க் ஆன ஜியோ ஆகியவற்றின் யூசர்களுக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கும் இந்த மெசேஜ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com