பணி நிரந்தரம் கோரி 169 ஆண்டுகளாக போராடும் கிராமிய தபால் ஊழியர்கள்.. நாளை ஸ்ட்ரைக்!

பணி நிரந்தரம் கோரி 169 ஆண்டுகளாக போராடும் கிராமிய தபால் ஊழியர்கள்.. நாளை ஸ்ட்ரைக்!
Published on

லகில் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை செய்தித் தொடர்பில் முக்கியப்பங்கு  வகிக்கிறது தபால்துறை என்றால் மிகையில்லை. நாட்டில் மிகப் பழமையான துறைகளில் இந்திய தபால் துறையே இன்றும் முன்னணியில் உள்ளது .

நாடு முழுவதும் 1.55 லட்சம் அலுவலகங்களை கொண்டு சுமார் 2.90 லட்சம் பேர் பணியாற்றும் இத்துறையில் கிராமப்புறங்களில் மட்டும் 2.49 லட்சம் பேர் கிராமிய தபால் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். நிரந்தரமாக்கப்பட்ட நகர்ப்புற அலுவலர்களை போல கிராமிய தபால் ஊழியர்களும் அனைத்து பணிகளையும் செய்தாலும் அதற்கேற்ற ஊதியமும் பணி நிரந்தரமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .கடந்த 2016ல் 7வது ஊதியக்குழு இவர்களுக்கு சாதகமாக பல பரிந்துரைகளை அளித்தும் அவைகள் இதுவரை அமலாகவில்லை .

1854ல்  ஆங்கிலேயர்கள்தான் முதன் முதலில் இந்தியாவின்  தபால்துறையில் நிலை ஊழியர்கள் பிரிவை உருவாக்கினர் அந்த பிரிவுதான் கிராமிய தபால் ஊழியர்களாக பெயர் மாற்றப்பட்டு தபால் பட்டுவாடாவுடன் சேமிப்பு கணக்கு, இன்சூரன்ஸ் ,மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தல் மணியார்டர் பட்டுவாடா ,ரிஜிஸ்டர் புக்கிங் ,ஸ்பீட் போஸ்ட் புக்கிங் ,தேசிய வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கிராமிய தபால் ஊழியர்கள் செய்து வருகின்றனர். எனினும் இதுவரை இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை .

தற்போது அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் கிராமிய தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவி மூன்று கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அக்டோபர் 4 (நாளை) நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால் கிளை தபால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் .

இந்தப் போராட்டத்தில் 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உள்ளிட்ட இலாக ஊழியர் அந்தஸ்து மற்றும் ஊதியக்குழு பரிந்துரைப்படி பண பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு பணிக்கொடை ஐந்து லட்சம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com